மயிலாடுதுறை ரமணியின் மலர்கள்.
மயிலாடுதுறை ரமணியின் தோட்டத்து வாசம் மிகு நறு மலர்களை, உங்கள் விருப்பமானவர்களுக்கு கொடுத்து மகிழ்வதோடு இறைவனுக்கு சூட்டியும் மகிழலாம்.
Mayiladuthurai Ramani will bring you different kind of flowers with different kind of fragrance..!
இந்திய காங்கிரஸ் அரசு, இந்திய கலாச்சாரச் சின்னமாக விளங்கும் இராமர் சேதுவை இடிக்கச் சொல்லும் கருணாநிதிக்கு துணை போகக்கூடாது.
அயோத்தி மன்னன் தசரதனின் மைந்தன் இராமன் வாழ்ந்த வரலாற்றை நமக்குப் படம் பிடித்துக் காட்டும் இராமர் சேது பாலத்தை ஏன் இடிக்கக்கூடாது ? என்பதை திரு எஸ்.வி ரமணி You Tube மூலம் தனது தமிழ் உரையில விளக்கி உள்ளார்.
"பிராமணர்களுக்கு அல்வா" நடிகர் எஸ்.வி.சேகர் புதிய நாடகம்.
சென்ற இரண்டுவாரங்களாக நாடக நடிகரும்,திரைப்பட சிரிப்பு நடிகருமான திரு.எஸ்.வி.சேகர் தாம் தென்னிந்திய பிராமணர் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு ஒன்றினை துவக்க இருப்பதாகவும்,தமிழக முதல்வரை சந்தித்து ஏழு விழுக்காடு இட ஒதுக்கீடு கோரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
தாம்ப்ராஸ் மாநிலத் தலைவர திரு திருவொற்றியூர் என்.நாராயணன் அவர்கள் திரு எஸ்.வி.சேகரின் துரோக முயற்சிக்கு எந்த முக்கியத்துவமும் கொடுத்திடாமல் அவரது சந்தர்ப்பவாதத்தினை,சுயநல முயற்சியினை புறக்கணித்து விடவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து எஸ்.வி.ரமணியின் தமிழ் உரையை "you Tube" முலம் கேளுங்கள்.
1878 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ந்தேதி, பிரான்ஸ் நாட்டிலே,பாரீஸ் நகரிலே பிறந்த ஒரு அற்புதப் பெண் குழந்தை,இந்திய மண்ணிற்கு வந்து,அதுவும் தமிழகத்தைத் தேடிவந்து,ஆன்மீக நல்லுணர்வையும்,சமரச சன்மார்க்க நெறியையும் பரப்புவதில் நாட்டங்கோண்டதை நினைக்கும்போது, நாம் இந்த மண்ணின் பெருமையை உலகுக்கெல்லாம் உயர்த்திக்காட்டிய அந்தப் பெண்மணியை ஸ்ரீ அன்னையை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.
ஸ்ரீ எஸ்.வி.ரமணியின் தமிழ் உரையை தொடர்ந்து "You Tube" மூலம் கேளுங்கள்.
திராவிடர் இயக்கங்கள் பிராமணர் துவேஷத்தையே அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தன.
கலைஞர் கருணாநிதி கடந்த சில மாதங்களுக்கு முன், சட்டசபையில் பேசும் போது அரசியலில் நாகரிகம் போய்விட்டது என்று கூறி உள்ளார். அவர் கூற்றை ஊர்ஜிதப்படுத்துவதுபோல், தினந்தோறும் பல அநாகரீக நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடை பெற்று வருகின்றன. சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில், ஒரு சில பண்பாடற்ற வழக்கறிஞ்ர்கள், இந்திய மூத்த அரசியல்வாதியான சுப்ரமணிய சுவாமியின் மீது முட்டையை வீசி,சாதிப் பெயரைச்சொல்லி, தாக்குதல் நடத்தவே, அது தொடர்ந்து வழக்கறிஞ்ர்கள், காவலர்களுக்கு இடையே பெரும் போராக மூண்டு, காவல் நிலையம் தீ வைக்கப்பட்டு, பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். இத்தகைய நிகழ்ச்சிகள், திராவிட இயக்கங்கள் தோன்றிய காலத்திலிருந்தே நடை பெற்று வருவதை திரு எஸ்..வி. ரமணி "You Tube" மூலம் விளக்கி உள்ளார்.
ஆண்டவனின் உருவத்தை கல்லில் வடித்து வழிபடுவதே சிறப்புடையது ஆகும். கோயில்களில் பதிப்பிகப்படுகிற சிற்பங்கள் ஆகம விதிப்படி பிரிதிஷ்டை செய்யப்படும் வரை கற்சிலைகளாகத்தான் இருக்கும்.. பிரிதிஷ்டை செய்யப்பட்ட சிற்பங்கள் சக்தி பொருந்திய மூர்த்திகளாக மாறிவிடும். அந்த விக்ரகங்களை மூர்த்தி என்று அழைப்பதன் காரணம் யந்திர பிரிதிஷ்டை செய்வதால் உண்டாகும் தெய்வீக சக்தியே. யந்திர பிரிதிஷ்டை செய்வதை பிராண பிரிதிஷ்டை என்று சொல்வார்கள்.
இந்த விக்கிரகங்களுக்கு கிடைக்கும் மாபெரும் சக்தியை முழுமைப்படுத்துவதற்காகத்தான் கும்பாபிஷேகம் செய்கிறார்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கும்பாபிஷேகம் செய்யப்படவேண்டும்.
கோயில்களில் தெய்வங்களை வணங்கும் முறை பற்றி திரு. எஸ்.வி.ரமணி தமிழில் "You Tube" மூலம் விளக்குகிறார்..
2006 ம் ஆண்டு 13 ம் தேதி அக்டோபரில் நடந்தம் சென்னை மாநகராட்சித் தேர்தலில், ஆளும் கட்சியின் தலைவர்கள் குண்டர்கள் படையுடன் ஓட்டுச்சாவடிகளைக் கைப்பற்றி ஜனநாயகக் கடமையாற்ற வந்த பொது மக்களை அடித்து விரட்டித் தாங்களே ஓட்டுக்களை, தங்கள் ஓட்டுப்பெட்டிகளில் அள்ளிப் போட்டுக்கொண்டு, வெற்றி வாகை சூடியதாக விழா எடுத்து மகிழ்ந்தனர். நீதி மன்றம் இந்தப புனிதர்கள் நடத்திய தேர்தல்களில், தில்லு முல்லுகள் நடந்ததைச் சுட்டிக்காட்டி மீண்டும் 99 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த உத்திரவிட்டது. 13-2-2007 நடை பெற்ற 67 வார்டுகளில் மக்கள் ஓட்டுப் போடவே வரப் பயந்தார்கள்.
பிரதான எதிர் கட்சிகளான அ. தி.மு.க, ம.தி.மு.க போன்றவர்கள் தேர்தலில் பங்கெடுக்காமல் போனதும், பா.ஜ.க. தே.மு.தி.க போன்ற பண்புடைய கட்சியினர் தங்களை தட்டிக் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்திலும், ஆளும் கட்சியின் பாடு இந்தத் தேர்தலிலும் கொண்டாட்டமாக அமைந்தது. வழக்கம் போலவே ஆளும் கட்சியினரால் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதை பத்திரிகைகள் படம் பிடித்துக் காட்டின.
தன்னைத் தமிழினக் காவலராகச் சொல்லிக்கொள்ளும் கலைஞர் கருணாநிதி, தனது கட்சியினர் இதைப் போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் இறங்கி ஜனநாயக நெறிமுறைகளை படுகொலை செய்யத் துடிப்பதை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? என்று புரியவில்லை.
ஜனநாயகத்தை படுகொலை செய்து அடி, தடி, கள்ள ஓட்டுப் போடுவதன் மூலமும், இலஞ்சம் கொடுத்தும், மற்றக் கட்சியினரை மிரட்டி தன்னோடு சேரவைப்பதன் மூலமும் தான் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற புதிய பகுத்தறிவு சித்தாந்தத்தை, நமது வருங்கால சந்ததிகள் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை இன்று தமிழகத்தில் ஆளுங்கட்சியினரால் உருவாகி உள்ளதை நினைத்தால், ஜனநாயகம் எப்படி பிழைக்கப் போகிறது? என்ற ஏக்கம்தான் நம் நெஞ்சை விட்டு நீங்காமல் நிற்கிறது.
இதையே திரு எஸ்.வி.ரமணி "You Tube" ல் தமிழில் விளக்குகிறார்
Thursday, February 12, 2009
பஞ்சாப் சிங்கம் மாவீரன் பகத் சிங்கும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளும்.
துப்பாக்கி முனையில் ஆள நினைப்பவர்கள், நீண்ட காலம் நிலைத்து ஆட்சி நடத்தியதாக வரலாறு கிடையாது, என்பதை இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது. இதை இலங்கையை ஆள்பவர்களும் உணர்ந்து தங்களை திருத்திக் கொள்ளவேண்டும்.
இதையே திரு எஸ்.வி.ரமணி "You Tube" ல் விளக்குகிறார்
காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.